உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 24, 2011

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கலில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவுடன் 6 ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கலின் போது சேர்க்க தேர்தல் ஆணையத்தின் சட்டப் பூர்வ ஆணை எண் 27ன்படி சிற்றுராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சாற்றுரையும், 

இதர பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி மொழி ஆவணமும் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும்.

மனுவுடன் நிரந்தர கணக்கு எண், 
வருமான வரி தாக்கல் செய்த விவரம், 
தமக்கு எதிராக கோர்ட்டில் தொடரப்பட்டு வழக்குகள், 
குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள், 
அசையும் மற்றும் அசையாத சொத்துகள்,
கடன் விவரங்கள், 
பொது மற்றும் அரசு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும்
கல்வித் தகுதி 

ஆகிய 6 விவரங்களையும் ஆவணமாக இணைக்க வேண்டும்.

மேலும் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதி மொழி ஆவணம் அளிக்க வேண்டும். 

மேற்கூறிய உறுதிமொழி, 

உறுதிமொழி ஆணையர்,
முதல் நிலை குற்றவியல் நீதிபதி, 
சான்று அலுவலர் (நோட்டரி பப்ளிக்) 

முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior