கடலூர்:
அகில இந்திய அளவில் நடைபெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான, வடிவமைப்புத் திறன் போட்டியில், கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில், தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வடிவமைப்புத் திறன் போட்டி, கடந்த 13, 14 தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து, பல்வேறு அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை சமர்ப்பித்து செயல் விளக்கம் அளித்தனர்.
இப்போட்டியில் கடலூர் சி.கே.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எம்.ஜெகதீஷ், ஏ.பிரவீன் குமார், சமாத் அப்பாஸ் அஞ்சும், ஆர்.சேதுராமன் ஆகியோர் வடிவமைத்த சமக் புரோ 2.0 மெகானிகல் வாஷிங் மெஷின் முதல் பரிசைப் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை சி.கே.பொறியியல் கல்லூரி மேலாண் இயக்குநர் சி.கே. ரங்கநாதன், இயக்குநர் டி.சந்திரசேகரன், முதல்வர் டாக்டர் ஆனந்த், சிறப்பு அலுவலர் ராஜா ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக