உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 20, 2011

விவசாயிகள் கல்லூரி செல்லாமலேயே பட்டம் பெறும் புதிய திட்டம்

                    விவசாயிகள் கல்லூரி செல்லாமலேயே பட்டம் பெறும் புதிய திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது குறித்து கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜவஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது; 

                    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக வேளாண்மை தொழில் நுட்பங்களைத் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் வழியாக 2005ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இவ்வியக்கத்தின் வழியாக சான்றிதழ் படிப்புகள், இளநிலை படிப்புகள், முதுநிலைப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்ட படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு இருப்போர் பயன்பெறும் வகையில் நேரடி செயல்முறை விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பயிற்சியாளர்களை ஈடுபடுத்தியும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நேர்முகப் பயிற்சி மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

                 விவசாயிகள் செய்யும் பண்ணைத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை பற்றி அறியவும், மேலும் அவற்றை செயல்முறைப்படுத்தி உற்பத்தியை பெருக்கவும், தமிழக விவசாயிகளுக்கு "இளநிலை பண்ணைத் தொழில்நுட்பம்' என்ற பட்டப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் பட்டதாரியாக விளங்கிடவும், அவர்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்தப்படவும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி அதிக விளைச்சலும், வருமானமும் பெற்றிடும் வகையில் இத்தொழில்நுட்ப பட்டபடிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பட்டபடிப்பானது தமிழ்மொழியில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

               10ம் வகுப்பு படித்த 27 வயது நிரம்பிய அனைவரும் சேர்ந்து பயன்பெறலாம். தொழில் நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப்பயிற்சி வழியாக மாதம் ஒரு முறை நடத்தப்படும். தினமும் கல்லூரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பானது மூன்று ஆண்டுகளுக்கு ஆறு செமஸ்டர் என்ற முறையில் நடைபெறும். கட்டணம் மற்றும் மேலும் தகவல் அறிய கோவில்பட்டியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவரை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior