உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 19, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/6eae6de3-4125-4b8a-abf3-d6ae30883f4c_S_secvpf.gif
 
கடலூர்
          
           கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.   
 
கடலூர் மாவட்டத்தில் 
 
கடலூர், 
சிதம்பரம் 
 
ஆகிய 2 நகராட்சிகள், 
 
வடலூர், குறிஞ்சிப்பாடி, 
திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், 
சேத்தியாதோப்பு, 
காட்டுமன்னார்கோவில், 
லால்பேட்டை, 
அண்ணாமலைநகர், புவனகிரி, 
கிள்ளை பரங்கிப்பேட்டை 
 
ஆகிய 11 பேரூராட்சிகளுக்கும், 
 
கடலூர், 
குறிஞ்சிப்பாடி, 
பரங்கிப்பேட்டை, 
மேல் புவனகிரி, 
கீரப்பாளையம், 
குமராட்சி, 
காட்டுமன்னார்கோவில்
 
            ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.

              மொத்தமுள்ள 3,149 பதவிகளுக்கு 11,626 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் .நகராட்சிகளில் 1,48,063 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 1,42,528 வாக்காளர்களும் ஊராட்சி ஒன்றியங்களில் 6,16,311 வாக்காளர்களும் வாக்களித்தனர். நகராட்சிகளுக்கு 187 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிகளுக்கு 186 வாக்குச்சாவடிகளும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,482 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.   பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior