கடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து, செவ்வாய்க்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் புதன்கிழமை 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.1,855 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
2-ம் கட்டமாக கடலூர், சிதம்பரம் ஆகிய 2 நகராட்சிகள், வடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, அண்ணாமலைநகர், புவனகிரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை ஆகிய 11 பேரூராட்சிகளுக்கும், கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 3,149 பதவிகளுக்கு 11,626 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
நகராட்சிகளில் 1,48,063 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 1,42,528 வாக்காளர்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 6,16,311 வாக்காளர்களும் வாக்களிக்கிறார்கள் .நகராட்சிகளுக்கு 187 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளுக்கு 186 வாக்குச் சாவடிகளும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,482 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து நகர்ப்புற வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்களும், கிராமப்புற வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளும் போய்ச் சேர்ந்தன.இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஊராட்சி உறுப்பினர்கள் 317 பேரும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வார்டு உறுப்பினரும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிகளுக் கு 9 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 4 பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக