உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 11, 2011

உள்ளாட்சி தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள்

கடலூர் : 

           ""கடலூர் மாவட்டத்தில் 924 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது'' என கலெக்டர் அமுதவல்லி கூறினார்.


கடலூரில்கலெக்டர் அமுதவல்லி கூறியது: 

                 மாவட்டத்தில் 2,772 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு 605 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 410 இடங்களில் 924 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் நுண்ணறி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணியில் 25 ஆயிரத்து 356 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுகின்றனர். பணியமர்த்தப்பட்ட ஓட்டுப்பதிவு அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களுக்கு தேர்தல் நடைபெறும் முதல் நாள் பகல் 12 மணிக்குச் செல்ல வேண்டும்.

                 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சள் கலரில் ஓட்டுச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை கலரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பும், ஊராட்சி வார்டு உறுப்பினர் வெள்ளை மற்றும் நீலமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இரு வார்டு கொண்ட ஓட்டுச் சாவடிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் வார்டிற்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டுகளும், இரண்டாம் வார்டிற்கு நீல நிற ஓட்டுச் சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி கூறினார்.

எஸ்.பி., பகலவன் கூறியது:

          தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் 4 அடுக்குப் பாதுகாப்பு, 127 நடமாடும் ரோந்து படையும், சட்டம் ஒழுங்கிற்கு 55 படையும் போடப்பட்டுள்ளது. மேலும் தேவையான போலீசாரை அரசிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு ஊடுருவும் மதுபான கடத்தலைத் தடுக்க 4 கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்படும். இன்று (நேற்று) கூட மதுகடத்தல் செய்த வாகனம் பிடிபட்டுள் ளது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior