உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 02, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முதலாவது இணை வேந்தர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் விழா


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/ed9c0769-b461-4bfe-add6-224d2049ee22_S_secvpf.gif
 
சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் முதலாவது இணை வேந்தர் டாக்டர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் விழா 77-வது நிறுவனர் நாளாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் கொண்டாடப்பட்டது.விழாவையட்டி பல்கலைக் கழகத்தில் உள்ள அண்ணா மலை செட்டியார் சிலைக்கு துணை வேந்தர் டாக்டர் ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

              விழாவில் பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் அனைத்து துறை முதல்வர்கள் ,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக ரசாயனத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெறும் வகையில் டிஎஸ்டி.பஸ்ட்.என்.எம்.ஆர். வசதியை துணைவேந்தர் ராமநாதன் தொடங்கி வைத்தார். அய்யப்பன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் நிறுவனர் நாள் விழா தொடங்கியது.விழாவுக்கு துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார்.

             விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள்நீதிபதியும், இந்திய சட்டக்குழு முன்னாள் தலைவருமான டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு முன்னாள்நீதிபதியும், இந்திய சட்டக்குழு முன்னாள் தலைவருமான டாக்டர் லட்சுமணன் கூறியது:

                  அரசியல் அமைப்பு சட்டத்தின் 45-வது பிரிவில் அரசியல் அமைப்பு தொடங்கியதில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் 14-வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் இலவச கட்டாய கல்வியை மாநில அரசு அளிக்க முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் இந்தியஅரசியல் அமைப்பு சட்டத்தின் 45-வது பிரிவு முழுமையாக நிறைவேற வில்லை என்று சொல்ல இயலாது.நமது நாடு இன்னும் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டியதுள்ளது.

             கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த நாட்டின் ஒளிமயமான வளர்ச்சிக்கு வித்தாக விளங்கக்கூடியவர்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன். தொடர்ந்து ஆச்சாள்புரம் நாதஸ்வர வித்துவான் சின்னத்தம்பிக்கு டாக்டர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தமிழ் இசை அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. 2010-2011-ம் கல்வி ஆண்டில் பல்வேறு பாட தேர்வுகளில் முதல் இடத்தை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அறக்கட்டளை பரிசுகள் வழங்கப்பட்டது.

              இசைச்கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, சென்னை கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் மருதூர் ராமலிங்கம், ஆர்.கே.கணபதி, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிவக்குமார், வக்கீல் சம்பந்தம், முத்துக்குமரன், துறை முதல்வர்கள் செல்வராஜ், கண்ணப்பன், பால சுப்பிர மணியன், முத்து வீரப்பன், பழனியப்பன், விஸ்வநாதன், வசந்தகுமார், டாக்டர் சிதம் பரம், தொலை தூரக்கல்வி இயக்கக இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம் உள்பட அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.  முடிவில் பதிவாளர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior