உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக மணிமேகலை பதவி ஏற்பு

கடலூர்:

              கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை (அ.தி.மு.க.) சனிக்கிழமை பதவி ஏற்றார். 

              கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வார்டுகள் 33. இதில் 20 வார்டுகளை அ.தி.மு.க.வும், 4 வார்டுகளை தே.மு.தி.க.வும், 5 வார்டுகளை சுயேச்சைகளும், 2 வார்டுகளை பா.ம.க.வும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலை ஒரு வார்டையும் கைப்பற்றின. சுயேச்சைகளில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். எனவே அ.தி.மு.க.வின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சுயேச்சையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

                தலைவர் பதவிக்கு 22-வது வார்டு உறுப்பினர் மணிமேகலையும், துணைத் தலைவர் பதவிக்கு 1-வது வார்டு உறுப்பினர் பாலாம்பிகையும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  வேறு யாரும் இரு பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சனிக்கிழமை பதவி ஏற்றனர்.  கடலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை அ.தி.மு.க. கடலூர் ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமியின் மனைவி ஆவார். துணைத் தலைவர் பாலாம்பிகை கடலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துகுமாரசாமியின் மனைவி ஆவார்.  

            ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை கடலூரை அடுத்த குமழங்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். அ.தி.மு.க.வில் 1991-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வருகிறார். கணவர் பழநிசாமி 1991-க்கு முன்னர் குமழங்குளம் அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராவும் 1991 முதல் 98 வரை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருந்தார். 2002 முதல் கடலூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior