உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 28, 2011

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பதவிகளின் விபரம்

                  தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

                இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

மாநில தேர்தல் வெளியிட்ட தகவலின்படி 
           
            அ.தி.மு.க. 9806 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

                        10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில் அ.தி.மு.க. 579 வார்டுகளை கைப்பற்றியது. தேர்தல் நடத்த 124 நகராட்சியில் அ.தி.மு.க. 89 நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 1680 நகராட்சி வார்டுகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 285 பேரூராட்சிகளையும், 2849 பேரூராட்சி வார்டுகளையும் அ.தி.மு,க, கைப்பற்றியது.

                மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 569 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3745 பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.   அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக தி.மு.க. 4023 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது. 23 நகரசபைகளும், 121 பேரூராட்சிகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 10 மாநகராட்சி வார்டுகளில் 128 பதவிகளையும், நகரசபை வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1820 பதவி களையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 26 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டில் 942 பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

                  3-வதாக சுயேட்சைகள் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர். மொத்தம் 3309 பதவிகள் சுயேட்சைகளுக்கு கிடைத்தது. இதில் 5 நகர சபையும், 64 பேரூராட்சியும், மாநகராட்சியில் 55 வார்டு களும் அடங்கும். தே.மு.தி.க. 855 பதவிகளை பிடித்து 4-வது இடத்தை கைப்பற்றியது. இதில் 2 நகரசபையும், 3 பேரூராட்சியும், மாநகராட்சியில் 8 வார்டுகளும் இதில் அடங்கும்.

                      காங்கிரஸ் கட்சிக்கு 737 பதவிகள் கிடைத்தது. இதில் 24 பேரூராட்சி அடங்கும்.அந்த கட்சிக்கு ஒரு நகரசபை கூட கிடைக்கவில்லை. பா.ம.க. 395 பதவிகளையும், பாரதிய ஜனதா 2 நகரசபை உள்பட 270 பதவிகளையும், ம.தி.மு.க. ஒரு நகரசபை உள்பட 193 பதவிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 நகரசபை உள்பட 159 பதவிகளையும், இந்திய கம்யூனிஸ்டு 99 பதவிகளையும் பிடித்தன. மற்றவைகள் 47 பதவிகளை பிடித்தன.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior