உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், நவம்பர் 14, 2011

கடலூர் அருகே தொண்டமாநத்தம் வார்டு உறுப்பினர் அடித்துக்கொலை

கடலூர்:

          கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் அடித்து கொலை செய்யப்பட்டார். கடலூர் சேடப்பாளையம் எஸ்.என்.நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (24). நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தொண்டமாநத்தம் வார்டு உறுப்பினர் பதவிக்கு அய்யப்ப னும் அதே ஊரைசேர்ந்த மணிகண்டனும்(24) போட்டியிட்டனர். இதில் அய்யப்பன் 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மணிகண்டன் தரப்பினர் அய்யப்பன் மீது கோபம் அடைந்தனர்.

         இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பார்வையிட்டுவிட்டு அய்யப்பன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சேகர் என்பவரின் வீட்டருகில் மணிகண்டன் தரப்பினை சேர்ந்தவர்கள் அவரை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

         இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பனின் மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் இளநீர் வியாபாரி சேகர், சுரேஷ், ஜெயக்குமார், மணிகண்டன், வெங்கடேசன், கணபதி ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதற்கிடையே புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இறந்தார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior