உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 16, 2011

கடலூரில் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணி தொடக்கம்

கடலூர் : 

           கடலூரில் பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிக்கு முதல் கட்டமாக கேபிள் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது.

           கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்டறியும் பொருட்டு நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு சேலத்தைச் சேர்ந்த எலிம் நிறுவனம் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பாரதி ரோடு ரவுண்டானா, பாரதி ரோடு நான்கு முனை சந்திப்பு, அண்ணா பாலம் சிக்னல், லாரன்ஸ் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு மற்றும் பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் நான்கு சுழலும் கேமரா, 18 கண்காணிப்பு கேமராவும், 28 ஒலி பெருக்கி கருவிகளை பொறுத்த உள்ளது.

           இதற்கான பூமி பூஜை கடந்த செப்டம்பர் 21ம் தேதி எஸ்.பி., பகலவன் தலைமையில் நடந்தது. அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் காரணமாக கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கவில்லை.தற்போது முதல் கட்டமாக சாலைகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் அமைய உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்திட கேபிள் அமைக்க சாலை ஓரங்களில் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து கேபிள் இழுத்த பின் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து வரும் புத்தாண்டு முதல் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior