சிதம்பரம் :
இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இலவச
பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப் பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை முதன்மை
ஆராய்ச்சியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சிதம்பரம் அண்ணாமலைப்
பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறையில் மத்திய உயிர் தொழில் நுட்பவியல்
துறை நிதி உதவியுடன் வரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை 3
நாட்கள் இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து முகாம்
இலவசமாக நடத்தப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி,
கல்வித்தகுதி, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் 5 ரூபாய்க்கான தபால் தலை
ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன்
முதன்மை ஆராய்ச்சியாளர் (உணவு பதப்படுத்துதல்),
வேளாண் பொருளாதாரத்துறை,
வேளாண் புலம்,
அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர்
என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக