உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், டிசம்பர் 22, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை : விருத்தாசலத்தில் தேமுதிக பேச்சாளர் சேகர் தற்கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/812155ee-6d27-404b-9df5-015e2dde744c_S_secvpf.gifவிருத்தாசலம் :

            தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பஸ் நிலையப் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு வயது 30. தேமுதிக தலைமைக் கழக பேச்சாளரான இவர், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்துக்கொடுக்குமாறு நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.

        அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு, போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது, சேகர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

         உடநே அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷப்பாட்டிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எழுதிய உருக்கமான கடிதமும் கிடைத்தது.

             அதில் ஒரு கடிதத்தில், மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதிக்கொண்டது. முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொளகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாலசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தேமுதிகவுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால் தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior