உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, டிசம்பர் 17, 2011

நெய்வேலி என்.எல்.சி பொறியாளருக்கு இலக்கிய மாமணி பட்டம்

நெய்வேலி:

             நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் எஸ்.எம்.கார்த்திகேயனுக்கு புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் இலக்கிய மாமணி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  

            புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து பாரதியின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தின் அண்மையில் நடத்தின. இவ்விழாவில் பாரதியாருக்கு பாமாலை சூட்டியதோடு, பாரதி பற்றிய நூல் வெளியீடு மற்றும் உரையரங்கம், பாட்டரங்கம் ஆகியவையும் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ் இலக்கியப் பணி ஆற்றிவரும் நெய்வேலி உலகத் தமிழ்செம்மொழிப் பேரவையின் பொதுச்செயலரும், என்எல்சி பொறியாளருமான எஸ்.எம்.கார்த்திகேயனுக்கு இலக்கிய மாமணி எனும் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார். 

              புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்மாமணி மன்னர்மன்னன், பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனர் பாரதி, புதுச்சேரி தமிழ்சங்கத் தலைவர் வி.முத்து, தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாரதிசுகுமாரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior