உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 20, 2011

கடலூரில் 166 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலி: ஆட்சியர்

சிதம்பரம்:

               கடலூர் மாவட்டத்தில் 166 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. தனிப்பிரிவு மற்றும் கடலூர் மாவட்ட தாட்கோ நிறுவனமும் இணைந்து எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான ஒரு மாதகால ஆயத்த பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  

            விழாவில் பல்கலைக்கழக பதிப்புத்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான நூலை துணைவேந்தர் எம்.ராநாதன் வெளியிட்ட அதன் முதல் பிரதியை ஆட்சியர் பெ.சீதாராமன் பெற்றுக் கொண்டார்.  

விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:  

           கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 604 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளது. இவற்றில் 166 இடங்கள் காலியாக உள்ளதால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது ஒரு நிர்வாக அலுவலர் 3 கிராமங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அனைவரும் தோல்வியுற்றனர்.  

           இதைக் கருóத்தில் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வகிப்பதால் அவ்ர்களுக்கு தேர்வுக்கான ஆயத்த பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 59.354 பேர் தேர்வு எழுதுகின்றனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியில் பங்கேற்ற 85 பேரும் தேர்ச்சி பெற வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெ.சீதாராமன் தெரிவித்தார்.  

விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வாழ்த்துரை வழங்கி பேசியது: 

             கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொகுத்து பதிப்புத்துறை மூலம் இலவச நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நூல் அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதுபோன்று டிஎன்பிஎஸ்சி, ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுக்கான நூல்களை பேராசிரியர்கள் தயாரித்து நமது பதிப்புத்துறை மூலம் வெளியிட வேண்டும்.  

              மேலும் இதுபோன்ற அரசு பயிற்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தயாராக உள்ளது என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். விழாவுக்கு கலைப்புல முதல்வர் ஏ.என்.கண்ணப்பன் தலைமை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி.ஸ பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வசிகாமணி வரவேற்றார். மாவட்ட தாட்கோ மேலாளர் ரங்கநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார். பேராசிரியர் கே.சிவக்குமார் நன்றி கூறினார்.  விழாவில் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior