தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள எத்தனை இடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர் கூறியது:
தமிழ்நாட்டில் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. இதில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம் யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவில் 39 ஆயிரம் சீட்டுகள் உள்ளன.
கணினி அறிவியல் பிரிவில் 36 ஆயிரம் இடங்களும்,
மெக்கானிக்கல் பிரிவில் 25 ஆயிரம் இடங்களும்,
எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 25 ஆயிரம் இடங்களும்,
இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் 22,500 சீட்டுகளும்,
சிவில் பிரிவில் 15 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. மருத்துவ கவுன்சிலிங் தொடங்கியவுடன் என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஆரம்பிக்கும். இதில் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங், உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு தொழிற்கல்வி பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் அதைத்தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்கும் பொது கவுன்சிலிங்கும் நடைபெறும். இவ்வாறு துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக