உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 02, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்கததால் பலர் 4 நாட்களாக குளிக்காமல் இருக்கும் அவலம்

கடலூர்:
           தானே புயலுக்கு கடலூர் மாவட்டம் முழுவதுமே மோசமாக பாதிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட அணைத்து பகுதியிலும் 4 நாட்கள் ஆகியும் இன்னும் மின்சாரம் வரவில்லை. எனவே அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கின்றன.  

              விளக்கு எரிப்பதற்கு மண்எண்ணையும் கிடைக்காமால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் மண்எண்ணை கிடைக்கிறது. அதுவும் ஒரு லிட்டர் ரூ.50-ல் இருந்து 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடைகளில் இருந்த மெழுகுவர்த்தி அணைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. எனவே மெழுகுவர்த்தியும் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

       நல்லெண்ணை அல்லது வேறு எண்ணைகளை கொண்டு விளக்கு எரிக்கிறார்கள். மின்சாரம் இல்லாததால் சார்ஜர் பேட்டரி விளக்குகளையும் பயன்படுத்த முடியவில்லை.  தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மற்ற அத்தியாவசிய தேவைக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. பலர் 4 நாட்களாக குளிக்காமலேயே உள்ளனர். துணிதுவைப்பது போன்றவற்றை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை நீடிக்கிறது.  

              தென்மாநிலம் முழுவதற்கும் மின்சாரம் சப்ளை செய்யும் நெய்வேலி நகரம்கூட தற்போது இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்கம்பிகளில் மரங்கள் விழுந்ததால் அவை அறுந்துவிட்டன. எனவே எந்த பகுதியிலும் மின்சாரம் இல்லை.  சிதம்பரம் நகரத்தில் மட்டும் நேற்று ஒருசில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மின்சாரம் வருவதற்கு 1 வாரத்துக்கு மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

         புயலால் சேதம் அடைந்த வீடுகளை சீர் செய்வதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், பிளாஸ்டிக் ஷீட் போன்றவையும் கடைகளில் கிடைக்கவில்லை. பல இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன. அவையும் கடைகளில் கிடைக்கவில்லை.    பெரும்பாளான செல்போன் டவர்கள் கீழே விழுந்து விட்டதால் இன்னும் தகவல் தொடர்பு சரியாக சீரடையவில்லை. அவ்வப்போது மட்டும் போன்கள் கிடைக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior