கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டதாக வதந்தி பரவியது, இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் வரும் என்றும் சிலர் வதந்தி பரப்பினர்.
கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வரும் நிலையில், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால், பொது மக்களுக்கு உண்மை நிலை அறிய வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் பெரும் பீதி அடைந்த மக்கள், சாலைகளில் குவிந்தனர். விடிய விடிய சாலைகளில் பொழுதைக் கழித்த மக்கள் பின்னரே இது வதந்தி என்று தெரியவந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி வெளியிட்ட செய்தி குறிப்பு
இது குறித்து வானிலை ஆய்வு மையமோ அல்லது அதிகாரபூர்வ அமைப்புகள் எதுவுமோ தகவல் தராத நிலையில், பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக