உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 19, 2012

தானே புயல் பாதித்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தமிழருவி மணியன்

           புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

         சுனாமி தாக்கியபோது ஒட்டு மொத்த தமிழகம் உதவிக் கரம் நீட்டியது. அதே போன்று கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதித்தவர்களுக்கும் உதவ வேண்டும். புயல் பாதித்த கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தமிழக அரசு மட்டுமே எல்லா நிவாரணங்களையும் செய்துவிட முடியாது. புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. இது போதாது. நிவாரணமாக ரூ.5ஆயிரம் கோடி வழங்க வேண்டும்.

             அந்தப் பகுதிகளில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். உடனடியாக அவை வழங்கப்பட வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்குப் போதிய வருமானம் இல்லாத நிலையில், அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கையைத் தொடங்கும் வரை அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது. அவற்றைத் தாற்காலிகமாக மூட வேண்டும் என்றார்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior