உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூரில் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கவில்லை

கடலூர்:
          தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை இன்னமும் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவும் இல்லை. இதனால்,பயனாளிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  
            கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகள், முதியோர் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இவை வழங்கப்பட்டு விடும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இன்னமும் வழங்கப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 
          ஆனால் தேவையில் 50 சதவீத அளவுக்கு வேட்டி, சேலைகள் வந்து இருப்பதாகவே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  புயலில் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகையுடன் இலவச வேட்டி,சேலைக்கான டோக்கனும் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை புயல் சேதத்துக்கான நிவாரணமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் கூட இன்னமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரவில்லையாம்.  
              இந்நிலையில் முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு மட்டும் பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆனால் மற்றவர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி-சேலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior