உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு மரங்கள் சேதம்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில், புயலால் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு  மரங்கள் முறிந்து விழுந்தன." தானே' புயல் தாக்குதலால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அரசு, தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரம் என இருந்த பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.

         மாவட்டத்தின் கடலோர கிராமங்களான தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இயற்கை சீற்றங்களின் போது, காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட வனத்துறை சார்பில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த, 10 ஆயிரம் சவுக்கை மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதேப் போன்று, அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பொதுப்பணித் துறையின் பாசன வாய்க்கால்கள் ஓரமாக நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த, 450 தேக்கு மரங்கள் முற்றிலும் விழுந்து சேதமடைந்தன.
            புயலால் விழுந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியிலும், அப்புறப்படுத்தப்பட்ட மரங்களின் சேத மதிப்புகளை கண்டறியும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும், அரசு அலுவலகங்களில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களை அளந்து, ஏலம் விடுவதற்கான தொகையை மதிப்பீடு செய்து தருமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் மரங்களை அளந்து கணக்கீடு செய்து வருகின்றனர். கணக்கீடு பணி முடிந்ததும், மரங்களை பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஏலம் விட உள்ளனர்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior