உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜனவரி 10, 2012

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வை


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/9ffa4128-cb30-447b-8530-593c1e2f1c8f_S_secvpf.gif
 
கடலூர்:

           தானே புயலால் புதுவை மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான இந்த குழுவினர் நேற்று முன் தினம் புதுவையில் புயல்சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.  

             
           நேற்றுக்  காலை கடலூரில் சேத பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது. காலை 9-30 மணி அளவில் கடலூர் சென்ற அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, புயல் நிவாரண அதிகாரி அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.    கூட்டத்தில் புயல் சேத விவரங்கள் குறித்து வீடியோ பதிவு புகைப்படங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் மத்திய குழுவிடம் அளித்தனர். மேலும் சேத விபரம் குறித்து விவர அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது.

           இதையடுத்து மத்திய குழுவினர் கடலூர் நகர பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து புயல் கரையை கடந்த தாழங்குடா துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளனர் .
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior