உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஜனவரி 10, 2012

தானே புயல் : நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை தாங்கினார்.

            தமிழகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க, தமிழக அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சாலைப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior