உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 08, 2012

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_401424.jpg

          "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான மக்கள், வடலூர் தைப்பூச ஜோதியை தரிசனம் செய்தனர். 

         கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், தருமசாலை, ஞான சபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. ஞானசபையில் நேற்று காலை, 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய காலங்களில், கறுப்புத் திரை, நீலத் திரை, பச்சைத் திரை, சிவப்புத் திரை, பொன்மைத் திரை, வெண்மைத் திரை, கலப்புத் திரை ஆகிய திரைகள் விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள், "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என, மகா மந்திரம் முழங்க, ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். 

        அதைத் தொடர்ந்து, இன்று காலை, 6 மணிக்கு நடக்கும் ஜோதி தரிசனத்துடன், தைப்பூச விழா நிறைவடைகிறது. வரும், 9ம் தேதி பகல், 12 மணிக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில், சித்தி வளாகத் திரு அறை தரிசனம் நடக்கிறது. அன்று காலை, 10 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வைத்து, திரு அறை திறக்கப்படுகிறது. பகல், 12 மணி முதல் மாலை, 6 மணி வரை திரு அறை தரிசனம் நடக்கிறது.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior