உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 22, 2012

தமிழக அரசில் அரசியலில் மாற்றம்: வைகோ

சிதம்பரம்:
 
 சிதம்பரம் பி.முட்லூரில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது:-  
 
           ம.தி.மு.க.வுக்கு தற்போது ஒளிமயமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு முந்திரி, பலா, வாழை, தென்னை மற்றும் நெற் பயிர்கள் அதிகமான பாதிப்பை ஏற்பட்டுத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மக்கள் மத்தியில் இந்த அழிவு நீங்காத நிலையை ஏற்படுத்திவிட்டது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கான்கிரீட் வீடுகள் மட்டும் கட்டி கொடுக்காமல் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
 
             தமிழக அரசில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தல் ம.தி.மு.க. மகத்தான வெற்றிபெற என்னை ஆசிர்வதித்து அனுப்புங்கள். இந்த இடைத்தேர்தலில் ஊழலை எதிர்த்து எழுச்சியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ம.தி.மு.க.வுக்கு மக்கள் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு தருவார்கள்.
 
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மோகனசுந்தரம், கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior