உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 31, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 16 லட்சம் விண்ணப்பங்கள்




      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 16 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.


     விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்காததால் தருமபுரி உள்ளிட்ட இடங்களில் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் தடியடியும் நடத்தியது.
 
பல இடங்களில் விண்ணப்பங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
 

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஆனால், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல்நாளே 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கூடுதலாக 6 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ""ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் முறையாக ஜூன் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தோராயமாக 8 லட்சம் பேர் வரை எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து மொத்தம் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

          எங்கெங்கு விண்ணப்பங்கள் தேவையோ, அங்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பாக எந்தவித கவலையும் அடைய வேண்டாம். விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பத்தை வாங்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

           இதில் 12 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 4 லட்சம் விண்ணப்பங்கள் உள்ளன. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால், அருகில் அதிகமாக விண்ணப்பங்கள் உள்ள பகுதியிலிருந்து உடனடியாக அந்த மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விநியோக மையங்களில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
 
      மாவட்டந்தோறும் உள்ள மையங்களில் எவ்வளவு விண்ணப்பங்கள் உள்ளன என்பதை சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.  விரைவில் கணினிமயமாக்கப்படும்: விண்ணப்ப விநியோகம், சமர்ப்பிக்கும் முறை ஆகியவை விரைவில் முழுமையாகக் கணினிமயமாக்கப்படும். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் நடைபெறும் ஏதேனும் ஒரு ஆசிரியர் தேர்வை முழுவதும் ஆன்-லைன் மூலம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் தேர்ச்சியடைய வேண்டும்: இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 7 சதவீதம் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வு எழுதும் அனைவரும் தங்களைச் சிறப்பான முறையில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 
      இந்தத் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறேன்.  மிகப்பெரிய ஒரு தேர்வை மிகக் குறைந்த ஆள்பலத்துடனும், வசதிகளுடனும் நடத்துகிறோம். இதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வைச் சிறப்பாக நடத்த விண்ணப்பதாரர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவை'' என்றார் அவர்.
 
 தேவைப்பட்டால் கடைசித் தேதி நீட்டிக்கப்படும்


 ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் தேதி தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.
 


         ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இப்போதும் விற்பனையாகி வருகின்றன.
ஏதேனும் ஒரு பகுதியில் மொத்தமாக விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது விண்ணப்பங்கள் தாமதமாகக் கிடைத்தது என்றாலோ தேதி நீட்டிப்பு செய்வது குறித்துப் பரிசீலனை செய்யப்படும். 

       மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதால் அதற்குரிய கால அவகாசம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவைப்படுகிறது. எனினும் இதுதொடர்பான இறுதி முடிவு ஏப்ரல் 3-ம் தேதி எடுக்கப்படும் என்றார் அவர்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior