தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது. இதன்படி, வீடுகள் உள்ளிட்ட குறைந்தழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் உயருகிறது. தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் 25 சதவீதம் உயருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நகுல்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
ஆண்டுக்கு ரூ. 9,742 கோடி அளவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என ஆணையத்திடம் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. தீவிரப் பரிசீலனைக்குப் பின், ஆண்டுக்கு ரூ. 7,874 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 5,300 கோடி கூடுதல் வருவாயும், உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடி கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
வீடுகளுக்கான கட்டண உயர்வு குறித்த மின்வாரிய பரிந்துரையில் மட்டும் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கும் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பெட்டிக் கடைகளுக்கான மின் கட்டணம், மின் வாரியம் கேட்டதைவிடக் குறைக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் பிற பரிந்துரைகள் அனைத்தும் அப்படியே நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
சப் மீட்டர் கணக்கில் கொள்ளப்படாது:
வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிக அளவு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
உயர்த்தப்பட்ட கட்டணம் (இரண்டு மாதங்களுக்கு)
* 100 யூனிட் வரை ரூ. 2.60
(அரசு மானியம் ரூ.1.60 -
நுகர்வோர் கட்டணம் ரூ.1.10).
தற்போது 1 யூனிட் 85 பைசா.
* 101 யூனிட் முதல்
200 யூனிட் வரை ரூ. 2.80
(அரசு மானியம் ரூ.1.00,
நுகர்வோர் கட்டணம் ரூ.1.80)
* 201 யூனிட் முதல்
500 யூனிட் வரை ரூ.4.00
(அரசு மானியம் 50 பைசா - நுகர்வோர் கட்டணம் ரூ. 3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
* 500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (அரசு மானியம் கிடையாது)
* * * ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சேவைக் கட்டணம் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக