உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று வாயிற் கூட்டம் நடத்தினர்.

>கடலூரில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க தடையாக உள்ள அரசாணை எண்.720ஐ திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன் வாயிற்கூட்டம் நடத்தினர். கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த வாயிற் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தரணிதரன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர் செல்வராசு வரவேற்றார். பொதுச் செயலர் கனகராசு கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior