கடலூர் :
கடலூர் நகர பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.>கடலூர் நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளால் நகரமே சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. அதனையொட்டி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, நகராட்சியில் உள்ள சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் நவீன ரக "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வைத்து அதன் மூலம் குப்பைகளை சேகரித்து பிரத்யேக லாரியைக் கொண்டு குப்பைகளை அள்ளி வந்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. >இந்நிலையில் அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகளை கையாளும் லாரி பழுதடைந்ததால், அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் பயனின்றி பாபு கலையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.< >இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி நிர்வாகம், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து நவீன வசதிகள் கொண்ட புதியரக "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் மற்றும் லாரி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டு பாபு கலையரங்கத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக லாரிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. இந்த லாரி வந்ததும், இந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக