உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 04, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா


விருத்தாசலம் : 

    ""முதல்வர் விலையில்லா "லேப்டாப்' அறிவித்து, உலகத்தை மாணவர்கள் கையில் கொடுத்துள்ளார்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா "லேப்-டாப்' வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் அரங்கநாதன், துணைத் தலைவர் சந்திரகுமார், ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணியன் வரவேற்றார். நகரச் செயலர் கலைச்செல்வன், மாவட்டபேரவை ரவி, கல்லூரி துறைத் தலைவர்கள் முத்தழகன், கதிர்வேல், மனோன்மணி, ஜெயந்தி, சாந்தி ஜெயரதி, மனோகரன், பிரவீனா, தமிழரசி, உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், என்.சி.சி., அலுவலர் மதிவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


ஊரகத் தொழில்துறை மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் சம்பத் மாணவ, மாணவிகளுக்கு "லேப்-டாப்' வழங்கிப் பேசியது:

         வாழ்க்கை நீண்ட வரலாறுடையது. அதில் கல்லூரி பருவம் வசந்தகாலம். மாணவ, மாணவிகள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிக்கலாம் என்ற ஏக்கம் இருக்கும். 
எந்த படிப்பிலும் கடின முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என உயர் பதவிகளில் இருப்பவர்கள் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் தான். முதல்வர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்-டாப் அறிவித்து உலகத்தை உங்கள் கையில் கொடுத்துள்ளார்.

         மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கல்வியை மேம்படுத்த பரிசு பொருளாக முதல்வர் உங்களுக்கு லேப்-டாப் வழங்கியுள்ளார்.  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 100 மாணவிகள் தங்கிப் படிக்கும் விடுதியை ஏற்படுத்தித் தருவேன். இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார். பேராசிரியர் கலாவதி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior