உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி 36 இடங்களில் 1,260 பேர் கைது


கடலூர் : 

    நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி மாவட்டத்தில் 36 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த 372 பெண்கள் உள்ளிட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர்.


      தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் வருகை, வீடுகளில் மின் உபயோகம் அதிகரிப்பு காரணங்களால் மின்சாரம் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாத காரணத்தினால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு வினியோகித்து வருகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் கடந்த இரண்டாண்டாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தினசரி 2 முதல் 4 மணி நேரமாக இருந்த மின்வெட்டு கடந்த மூன்று மாதங்களாக தினசரி 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


     மின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை சமாளிக்க மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யப்படும் 2,490 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக பொதுத்துறை சமூக கடமை (கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) என்ற முறையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என இந்திய கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாவட்டத்தில் 36 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.


      கடலூரில் நகர செயலர் குளோப் தலைமையில் 10 பெண்கள் உட்பட 70 பேரும்,        சிதம்பரத்தில் மாநில நிர்வாக்குழு மணிவாசகம், மாவட்ட நிர்வாகக்குழு சேகர் தலைமையில் 20 பெண்கள் உட்பட 29 பேர், புவனகிரியில் நகர செயலர் சீனுவாசன் தலைமையில் 38 பேர், பரங்கிப்பேட்டையில் நகர செயலர் வல்லரசன் தலைமையில் 19 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

      விருத்தாசலத்தில் நகர செயலர் மேத்யூ தலைமையில் 27 பேர், கருவேப்பிலங்குறிச்சியில் வட்டசெயலர் கலியபெருமாள் தலைமையில் 35 பேரும், திட்டக்குடியில் செல்வராஜ் தலைமையில் 5 பெண்கள் உட்பட 30 பேரும், ஆவினங்குடியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தலைமையில் 2 பெண்கள் உட்பட 19 பேரும், மங்களூரில் குமார் தலைமையில் 11 பெண்கள் உட்பட 24 பேர், ராமநத்தத்தில் ராமலிங்கம் தலைமையில் 20 பேர், பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய துணைச் செயலர் கருப்புசாமி தலைமையில் 22 பேர், முருகன்குடியில் வேல்முருகன் தலைமையில் 16 பேரும், வேப்பூரில் நல்லூர் ஒன்றிய நிர்வாகக்குழு அருள்மணி தலைமையில் 24 பெண்கள் உட்பட 49 பேர் மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டியில் வட்டச் செயலர் துரை தலைமையில் 83 பேரும்,


          திருவதிகையில் குணசேகரன் தலைமையில் 50 பேர், அண்ணாகிராமத்தில் திருமலை தலைமையில் 22 பேரும், புதுப்பேட்டையில் பாஸ்கர் தலைமையில் 37 பேரும், அங்குசெட்டிப்பாளையத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் 54 பேரும், காடாம்புலியூரில் குணசேகரன் தலைமையில் 28 பேரும், கொள்ளுக்காரன்குட்டையில் மாவட்ட குழு சரவணன் தலைமையில் 73 பேர், ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் 54 பேரும், சோழதரத்தில் மாவட்ட குழு ராஜ் தலைமையில் 25 பெண்கள் உட்பட 62 பேரும், நாச்சியார்பேட்டையில் பட்டுசாமி தலைமையில் 15 பெண்கள் உட்பட 32 பேரும், நடுவீரப்பட்டில் 68 பேரும், காட்டுமன்னார்கோவிலில் 68 பேர், கடம்பூரில் 45 பேர், மேல்பழஞ்சநல்லூரில் 14, டி.நெடுஞ்சேரியில் 23 பேர் என மாவட்டத்தில் 36 இடங்களில் நடந்த மறியலில் 372 பெண்கள் உட்பட 1,260 பேர் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தன













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior