உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா


நெய்வேலி : 

        நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு தின விழா நடந்தது.


      என்.எல்.சி., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு தின விழாவையொட்டி நடந்த கபடி, கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பச்சை, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு அணிகளில் நீல அணி முதலிடத்தை வென்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. தடகளப் போட்டிகளில் மஞ்சள் நிற அணியினர் சுழற்கோப்பையை வென்றனர். தனித்திறன் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் தெய்வசிகாமணியும் பெண்களுக்கான பிரிவில் வித்யாவும் முதலிடத்தை பெற்றனர். 

       இதேப்போன்று கலை மற்றும் பண்பாட்டு தினவிழாவையொட்டி நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடந்தது. பரிசளிப்பு விழாவிற்கு என்.எல்.சி., முதன்மை பொது மேலாளர் கமலநயனன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் நல்லதம்பி,திருவள்ளுவர் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் அமுல்தாஸ், ஜவகர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார்.

     நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.  பேராசிரியர்கள் கிறிஸ்டோபர், சுஜாதா, உமாபதி, சேஷாத்ரி, இளங்கோவன், ஆளவந்தான், அனிதா, தமிழ்ச்செல்வன், வேல்முருகன், பானுமதி, பிரேமலதா மற்றும் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior