உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 25, 2012

கடலூரில் அட்சய திருதியையொட்டி நகைகடைகளில் அலைமோதியது கூட்டம்

கடலூர்:

அட்சய திருதியையொட்டி கடலூரில் உள்ள நகைகடைகளில் கூட்டம் அலை மோதியது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் இருந்ததால், கடலூரில் நகைகடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோட்டில் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது  நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம்காத்திருந்து நகைகள் வாங்கும் நிலை ஏற்பட்டது. கூட்டத்தை தவிர்க்க பலர், கடைகளில் ஏற்கனவே  நகைகளை தேர்வு  செய்து  முன்பதிவு செய்து அட்ச ய திருதியைன்று நகைகளை வாங்கிச் öŒன்றனர். நேற்று  மாலை நகைக் கடைகளுக்கு மக்களின் வருகை அதிகரித்ததால், லாரன்ஸ் ரோட்டில் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தை தொடர்ந்து லாரன்ஸ்  ரோட்டில் போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior