உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஏப்ரல் 11, 2012

கடலூர் செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர்:

      செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கடலூர் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழாவில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். ;விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் ஜெ.ஜான்ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாவட்ட சார் ஆட்சியர் கே.வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் எம்.மனோகரன், துணை இயக்குநர் மருத்துவர் பி.சம்பத், கல்லூரி துணை முதல்வர் அருமைசெல்வம், ஜெயந்தி ரவிச்சந்திரன், அனிலன்கா, தங்கமணி, செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கே.கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திட்ட அலுவலர் பி.ஜான்தாமஸ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior