உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கடலூரில் மக்கள் நல பணியாளர்கள் சாலை மறியல்

கடலூர்

         மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று  மாநில அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலூர் உழவர்சந்தை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலபணியாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

      இம்பீரியல் சாலையில் சென்றபோது ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதிக்கு திருப்பாப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 300 பேரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior