உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:

      பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது: 

       தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி உடன் மூச்சு திணறல் இருந்தால் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். மேற்கண்ட வகையில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior