உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்


கடலூர் : 

  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தினமும் காலை, மாலை ஏராளமான விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  நடைபாதையையொட்டி ஓய்வு எடுக்கவும், காற்று வாங்கவும், பசுமையாக நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், தூங்கு மூஞ்சி மரங்கள் கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலின் தாக்குதலில் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒரு சில மரங்கள் மட்டுமே தப்பின. பல மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் எலும்புக் கூடாகவே நிற்கின்றன.

      இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி அனல் காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், அண்ணா விளையாட்டரங்கில் போதுமான மரங்கள் இல்லாததால் வீரர், வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி சோர்வு அடைகின்றனர். எனவே, அனைத்து தரப்பினரின் நலன் கருதி நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior