உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்


கடலூர் : 

    என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.

     கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்து வருபவர் கோமதி, 45. 

இவர் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனு:

        கந்தசாமி நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மற்றும் கணிதத்துறையும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. கணிதத் துறையில் பேராசிரியராக இருக்கும் சாந்தியை பேராசிரியைகள் முல்லை, வரலாறு துறையைச் சேர்ந்த திருஞானம் ஆகியோர் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த 7ம் தேதி இவர்கள் மூவரும் சத்தம்போட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பாடம் நடத்துவதற்காக சில குறிப்புகள் தயாரிக்க கடினமாக இருக்கிறது. எனவே மெதுவாகப் பேசுங்கள் என கூறினேன். அதற்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior