உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, மே 05, 2012

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் தேரோட்டம்


ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேரோட்டம்.

சிதம்பரம்:


 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தொடங்கியது. ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீயக்ஞவராகசுவாமி திருத்தேரில் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தேர்திருவிழாவில் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆனால் கடை வீதி அருகே வந்தபோது அங்கிருந்த கட்டட முகப்பின் மீது மோதி தேர் நின்றுவிட்டது. சனிக்கிழமை காலை தேரை நிலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தாரின் உதவியுடன் திருத்தேர் அச்சு மற்றும் சக்கரம் பொருத்தப்பட்டு, பழுதுபார்த்து கடந்த ஏப். 25-ம் தேதி திருத்தேர் திருப்பணி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர் நிலைக்கு வருவதில் தடை

தேர் கடைவீதி அருகே வந்தபோது கானூர் செட்டியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தேரின் மேல்பகுதி இடித்து அதில் சிக்கியது. இதனால் தேர் நிலைக்கு செல்வது தடைபட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளிலிருந்து தேரை நகர்த்தினால் தேரின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடையும் என்பதால் சனிக்கிழமை காலை தேரை சீரமைத்து நிலைக்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் சுவாமியுடன் தேர் அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior