உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், ஜூன் 20, 2012

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட் முன்பதிவு வசதி

.சிதம்பரம் :

சிதம்பரம் தபால் நிலையத்தில் ரயில்வே, விமான டிக்கெட்  முன்பதிவு வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என தலைமை அஞ்சல் துறைக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை அஞ்சல்துறை தலைவருக்கு, பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அனுப்பியுள்ள மனு:


இந்திய ரயில்வே மற்றும் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்பெறும் வகையிலும், அவர்கள் ரயில்வே நிலையங்களில் சென்று காத்திருக்க  வேண்டிய அவல நிலையில் இருந்து விடுபடவும், அஞ்சல் நிலையங்களிலேயே ரயில்வே,  விமான டிக்கெட் போன்றவற்றிற்கு முன்பதிவு மேற்கொள்ள தக்க வசதிகள்  உருவாக்கியுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் அஞ்சல்துறை கொடுத்துள்ள அறிவிப்பு பாராட்டத்தக்கது. சிதம்பரம் தலைமை  அஞ்சலகத்தில் இவ்வளவு காலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு நடக்கவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் அண்ணாமலைப்  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவிற்காக நீண்ட  நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அஞ்சல்துறை  அறிவித்ததுபோல் சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு வசதியை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior