உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா

சிதம்பரம் :


      சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதி செம்மொழி மன்ற துவக்க விழா நடந்தது.

     கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் மணிமேகலை, நிர்வாக செயலர் பாபு, ஆங்கிலப்புல முனைவர் அப்துல் ரஹீம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அண்ணா துரை வரவேற்றார். இணை பேராசிரியர் இந்திராகாந்தி தொகுத்து வழங்கினார். மாநில கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் இளங்கோ திருக்குறள் காட்டும் ஒழுக்கம் என்ற பொருளில் கருத்துரை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் சந்திரசேகர் காப்பியங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிகள் எனும் தலைப்பில் பேசினார். கல்லூரி மாணவர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாமசுந்தரி நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior