உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

ஆடிப்பெருக்கையொட்டி தலைமை தபால் நிலையத்தில் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை

கடலூர் :


ஆடிப்பெருக்கையொட்டி இன்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் 6.5 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தபால் துறை இணைந்து தங்கக் காசுகள் விற்பனையை தபால் அலுவலகங்கள் மூலம், திருச்சி மண்டல தபால் நிலையங்களில் நடத்தி வருகிறது. இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 6.5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியுடன் தங்க நாணயங்களை விற்பனை செய்யப்படஉள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி அதிக பலன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த நாணயங்கள் அரை கிராம், 1, 2, 5, 8 மற்றும் 20, 50 கிராம்களில் 99.9 சதவீதம் தூயத் தன்மையுடன் வழங்கப்படுகிறது. இந்த நாணயங்களுக்கு உலக கவுன்சில் தரச் சான்றிதழ் உள்ளது.


        வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior