உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 02, 2012

கடலூர் அரசு பள்ளிகளில் செல்போனுக்கு தடை

கடலூர் :
    கடலூர் அரசு பள்ளிகளில் செல்போன் வைத்திருக்கிறார்களா? என்று மாணவிகளிடம் ஆசிரியர்கள் திடீரென சோதனை நடத்தினர்.


    தமிழகம் முழுவதும் பள்ளியில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளிடம் திடீரென சோதனை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கடலூரில் உள்ள முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆசிரியர்கள் மாணவிகள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். இந்த சோதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் முன்னிலையில் நடந்தது. முதுநகரில் தலைமை ஆசிரியர் சம்பந்தம், திருப்பாதிரிப்புலியூரில் நாகராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் வகுப்பு ஆசிரியர்கள் மாணவிகளின் பையில் செல்போன் உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர்.



இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் கூறியது:-


      தமிழக அரசின் 261 அரசாணைப்படி பள்ளி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கு இது பொருந்தும். இந்த அரசாணை முதலில் 2007-ல் வந்தது. அதன் பின் 16.2.2012 பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவு மூலம் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது. இந்த தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்களின் செல்போனை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஏனென்றால் சில மாணவர்கள் செல்போன் வைத்திருப்பது அவர்களின் பெற்றோருக்கே தெரியாது. மாணவர்களின் பெற்றோர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் கல்வி அலுவலர், மற்றும் இதர அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும் போது செல்போன் தடைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனை அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior