உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி

நெல்லிக்குப்பம்:


நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க ஆள் இல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய பிட்டர் இளங்கோ இரண்டு மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.நகரம் முழுவதும் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். நடப்பு ஆண்டு அந்த டெண்டரும் விட வில்லை. கடந்த ஒரு வாரமாக 10வது வார்டு கந்தசாமி தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குளம்போல தேங்கி நிற்கிறது.கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளதால் நோய் பரவும் சூழல் உள்ளது. நோய்  பரவும் முன் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சியில் குடிநீர் குழாய்கள் உடைந்தால்  ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. மக்களின் அடிப்படை தே வையான குடிநீர்   குழாய்களை பராமரிக்க ஆட்கள் நியமிப்பதில் கவனம் செலுத்த வே ண்டும்..

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior