உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் அழிந்துவரும் கோவில் சுடுமண் சிற்பங்கள்

சிறுபாக்கம்:


     பழமை வாய்ந்த கோவில்களில் சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பிரதான கோவில்களில் பண்டை காலத்தில் கிராமத்தினையொட்டி ஆண்டவர், ஐயனார், எல்லையம்மன், கருப்பையா, மதுரைவீரன் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இயற்கை சூழலுடன் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

           இங்கு கிராம மக்கள் தை முதல் சித்திரை மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஊரணி பொங்கலிட்டு திருத்தேர்விழா நடத்துவார்கள். முக்கிய விழாக்கள் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் போதிய மழை பெய்து வேளாண்மையில் அதிக மகசூலை பெறவும், கிராமம் அமைதியாக இருக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உண்டு. கிராமப்புற திறந்த வெளி கோவில்களில் குலதெய்வமாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவிடவும், பிள்ளை பேறு அடையவும் வேண்டுதல் வைத்து அவை நிறைவேறியவுடன் சுடுமண்ணால் அமைக்கப்பட்ட குதிரைகள், யானைகள் அமைத்து கிடா பூஜையுடன் நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். இதுபோன்ற கோவில்களில் கம்பீரமாக அலங்கரித்த சுடுமண் சிற்பங்கள் அண்மைக் காலமாக சிதைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன. மே லும் சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவதும் குறைந்து வருகிறது.


     சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோவிலில் சேலம், ஈரோடு, ராசிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தது போன்று பெரிய மற்றும் சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவது குறைந்து விட்டது. பழமை வாய்ந்த சுடுமண் சிற்பங்கள் முற்றிலும் அழிந்து விடாமல்தொல்லியல்துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior