உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

கடலூர் புனித வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் 100 பேர் ரத்ததானம்

கடலூர், :


    கடலூரில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவியர் 100 பேர் ரத்ததானம் செய்தனர்.

         கடலூர் புனித வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மற்றும் அன்னை தெரசா நிறுவனம் ஆகியன இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. கல்லூரி செயலர் முனை வர் ரட்சகர் அடிகளார் முகாமினை தொடக்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் மாணவிகள் 100 பேர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ரத்த வங்கி பொறுப்பு அலுவலர் சண்முககனி, அன்னைதெரசா சேவை இயக்கத் தலைவர் அகஸ்டின் பிரபாகரன், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சந்தானராஜ், அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சின்னப்பன், துணை முதல்வர் அருமைசெல்வம், ஒய்.ஆர்.சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டிபேர்னன், வேலை வாய்ப்பு அலுவலர் எட்வின் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். மாணவர்களோடு சேர்ந்த பேராசிரியர் எட்வினும் ரத்ததானம் செய்தார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior