உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 15, 2012

கடலூர் மாவட்டத்தில் போர் விமானத்தால் பரபரப்பு


          கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலூர், புவனகிரி, அங்குசெட்டிபாளையம், காட்டுமன்னார்குடி, பரங்கிப்பேட்டை, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பெரும்வெடிச்சத்தத்தையடுத்து, திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

        மாவட்ட நிர்வாகம் இந்த செய்தியை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை திரட்டி வருகிறது. பரங்கிப்பேட்டையில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு இருக்கிற போர் விமானம் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தாழ்வாக பறந்ததால், அந்த சத்தம் தான் மிகப்பெரிய அதிர்வை உருவாக்கியுள்ளது. நில அதிர்வு என்று நினைத்து சில பள்ளி கல்லூரிகளும் விடுமுறை விடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior