உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
புதன், பிப்ரவரி 15, 2012

கடலூரில் அனுமதியின்றி கண்ணாடி தொழிற்சாலை

கடலூர்:

          கடலூரில் குடியிருப்புப் பகுதியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கும் தனியார் கண்ணாடி இழைத் தொழிற்சாலையைத் தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.   

              கடலூர் பெரிய கங்கனாங்குப்பம் சரஸ்வதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் தமிழ்மணி, செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்கள் பகுதியில் அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதியின்றி இயங்கும் கண்ணாடி இழைத் தொழிற்சாலையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். 

            இத்தொழிற்சாலையால் அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி வாந்தி மயக்கம், தலைவலி ஏற்படுவதாகப் புகாரில் கூறியுள்ளனர்.  இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் அளித்த பதில் கடிதத்தில், மேற்கண்ட தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை என்றும், நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்று கேட்டு, கடலூர் நகராட்சிக்குக் கடிதம் எழுதி இருப்பதாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior