பண்ருட்டி:
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் நேஷனல் கல்வியியல் கல்லூரி, நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் நெய்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து மகளிர் தினவிழாவை கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின. அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமையில் நடந்த விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பைகளையும், தையல் இயந்திரத்தையும் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார். நெய்வேலி ரோட்டரி சங்கத் தலைவி மருத்துவர் அன்புக்கிளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மகளிர் குழுத் தலைவர் நடராஜன் வாழ்த்திப் பேசினார். ரோட்டரி செயலர் மு.புலேந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக