கடலூர்:
அரசு தட்டச்சு தேர்வு தமிழகத்தில் வரும் 31ம் தேதி 96 மையங்களில் நடக்கிறது.
தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு தேர்வு வரும் 31ம் தேதி மாநிலத்தில் 96 மையங்களில் நடக்கிறது. அதில் வரும் 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4 அணிகளாகவும், செப்டம்பர் 1ம் தேதி இளநிலை தேர்வில் 5வது அணியும், முதுநிலைத் தேர்வு மூன்று அணிகளாக நடக்கிறது. அன்றைய தினமே உயர் வேகத் (ஹை ஸ்பீடு) தேர்வு மற்றும் 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான புகுமுக இளநிலைத் தேர்வு நடக்கிறது.
கடலூர் மாவட்டத்தில்
1. கடலூர் கிருஷ்ணசாமி
பாலிடெக்னிக் கல்லூரி,
2. சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி,
3. நெய்வேலி
விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி,
4. விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரி
ஆகிய நான்கு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில்,
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி,
திண்டிவனம்
பி.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும்,
புதுச்சேரியில்,
1. புதுச்சேரி மோதிலால்
நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும்
2. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
ஆகிய மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.
இத்தேர்வை 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் புகுமுக இளநிலை தட்டச்சு தேர்வும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைத் தேர்வும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைத் தேர்வும், தட்டச்சில் முதுநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் "ஹை
ஸ்பீடு' தேர்வு எழுதுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக